திடீரென வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாததால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வாட்ஸ் ஆப் மெஸெஞ்சரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் ஆகியவற்றை அனுப்பலாம்.
இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி தற்காலிகமாக முடங்கியிருக்கிறது. இதனால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், இந்த முடக்கம் எதனால் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியவில்லை என குற்றச்சாட்டுக்களும் எழுந்தது. இது சம்மந்தமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்காததால் வாட்ஸ்ஆப்டௌன் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.