தன்னுடைய வாடிக்கையாளர்கள் New Privacy Policyயை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Privacy Policy மாற்றத்திற்கு பயனர்கள், மே 15ம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ் அப் நிறுவனம் காலக்கெடு அளித்திருந்தது.
ஒப்பதல் அளிக்கவில்லை என்றால், அவர்களது கணக்குகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது, இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது கணக்குகள் அளிக்கப்படாது என வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
எனினும், புது அப்டேட் செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெரும்பாலான பயனர்கள் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
புது அப்டேட் செய்வோரின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது என வாட்ஸ்அப் அதன் பயனர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.