ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இணைப்பு
விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி (Ebrahim Raisi) பயணம் செய்த ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக துருக்கியின் ஆளில்லா விமானங்கள் தெரிவிக்கும் பகுதி தப்பிரிஸ் நகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுவதாக அல்ஜசீராதெரிவித்துள்ளது
தவில் என்ற கிராமத்தில் ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் கருதுகின்றனர். இதேவேளை 75 பேர் கொண்ட மீட்பு குழுவினரை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ஈரானின் செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி
விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் (Ebrahim Raisi) ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தனது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளன என துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த விபரங்களை துருக்கி ஈரானுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் துருக்கியின் ஆளில்லா விமானங்கள் , ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் காணப்படுவதாக தெரிவித்துள்ள பகுதிக்கு ஈரான் தனது மீட்பு பணியாளர்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
சிதைவுகள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சரையும் ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி வடமேற்கு ஈரானில் விழுந்து நொறுங்கிய இடத்தில் “இருவரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது .
இந்த விபத்தில் உலங்குவானூர்தி முற்றிலும் எரிந்துள்ளதாக ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது இதேவேளை ஈரானிய தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உலங்குவானூர்தி சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர்.
விபத்து
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.
ஹெலிகாப்டரில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்த நிலையில் அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.