மஹியங்கனையில் பாடசாலை மாணவி ஒருவர் மீது பலமுறை கத்திக் குத்து நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராதுருகோட்டை பிரதேசத்தில் காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் படுகாமயடைந்த 12 வயதுடைய மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது மாணவன் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் வீட்டு பகுதிக்கு பல நாட்களாக கத்தியுடன் வந்து செல்லும் மாணவன் முகத்தை மறைத்த நிலையில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்தியால் குத்திய மாணவனும், படுகாயமடைந்த மாணவியும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


















