காலி பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்று வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவு குடித்து குறித்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நீடிக்கும் பகிடிவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எனினும் தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.