ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து சூரிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் புகை மூட்டத்தால் ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் பணியாளர்கள் உட்பட 79 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) விமானம், கேபின் மற்றும் காக்பிட்டில் புகை காரணமாக ஆஸ்திரியாவின் கிராஸில் அவசரமாகதரையிறக்கப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் 220-300 விமானம் திங்களன்று ருமேனியாவின் புக்கரெஸ்டிலிருந்து சூரிச் நோக்கிச் சென்றது. அப்போது இயந்திரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக விமானத்தை நிறுத்த பணியாளர்கள் முடிவு செய்தனர் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
LX1885 விமானத்தில் ஐந்து பணியாளர்கள் உட்பட 79 பேர் இருந்தனர். விமானம் கவனமாகத் தரையிறக்கப்பட்டது மற்றும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
12 பயணிகள் மருத்துவ சிகிச்சை பெற்றனர் மற்றும் ஒரு கேபின் குழு உறுப்பினர் உலங்கு வானூர்தி மூலம் கிராஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர்களின் நிலை தெளிவாக தெரியவில்லை.
மற்ற நான்கு பணியாளர்களும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.