கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை நாவற்குலி பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மூடு பனி காரணமாக வேன் புரண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் வேனில் பயணித்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.