முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள போவதில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதுடன் பதில் அமைப்பாளராக லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.