சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், மக்கள் பீதியில் உள்ளதால், விமானநிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களில் சிலர் படிப்புக்காவும், வேலைக்காகவும், இன்னும் சில காரணங்களுக்காகவும் சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவில் உயிரைக் கொல்லும் நோயாக கொரோனா வைரஸ் ஒன்று உருவாகியுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தாக்கம் வேகமாக பரவுவதால், சீனாவில் இருந்து வரும் மக்கள் பலரும் நாட்டில் இருக்கும் விமானநிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து மிக்க பகுதிகளில் மருத்துவரின் சோதனைக்கு பின்னரே அனுப்பப்படுகின்றனர்.
அமெரிக்கா, வடகொரியா, தாய்லாந்து போன்ற நாட்டில் கொரோனா இப்போது அடியெடுத்து வைத்துள்ளதால், உலக மக்கள் பலரும், இது நம்ம நாட்டிற்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சீனாவில் இருக்கும் விமானநிறுவனங்கள் சில, இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் புக் செய்திருந்தால், அந்த டிக்கெட்டிற்கான பணத்தை திருருப்பித் தர முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி 15-ஆம் திகதி முதல் வரும் பிப்ரவரி 29-ஆம் திகதி வரை குறிப்பிட்ட விமானங்களிலும் செல்லும் பயணிகள், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு டிக்கெட்டிற்கான முழு பணமும் வழங்கப்படுமாம்.
இதற்கு அவர்கள் விமான நிலைய சுகாதாரத் துறையிடமிருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் எனவும், அதன் பின் டிக்கெட் மறுசீரமைப்ப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு Wuhan மற்றும் Hubei மாகாணத்தில் இருந்து விமானம் மூலம் செல்லும் பயணிகளுக்கு மட்டும் எனவும் Tianjin Airlines, Hainan Airlines மற்றும் Kunming Airlines ஆகியவை முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்காக பயணிகள் விமானநிலையத்தில் இருக்கும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின் அது உறுதியானால் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.