பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை இன்று உறுதி செய்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தகுதியான நபர் நியமிக்கப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் இல்லை அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.