யாழ்.பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவியை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயான அவரது கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து சந்தேகநபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த எச்.டி.ஆர்.காஞ்சனா நேற்று பண்ணை கடற்கரைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் அப்பெண் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்றுவந்த வேளை, வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த கணவன் குறித்த பெண்ணை கொலை செய்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட கணவர் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் மருத்துவ பிரிவில் பணியாற்றும் 29 வயதுடைய பேருவளை பகுதியைச் சேர்ந்த மதுகம இரங்க பிலிப் குமார எனத் தெரியவருகின்றது.