யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாக தேடப்படும் முக்கிய இளைஞன் உள்ளிட்ட 6 பேர் தங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் குறித்த வீட்டினை பெருமளவு இராணுவத்தினர் இன்று பிற்பகல் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியிருந்தனர்.
இதன்போது இளைஞன் ஒருவனை இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் கூறியிருக்கின்றனர். இருப்பினும் இராணுவத்தினரோ பொலிஸாரோ இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.