வவுனியாவை சேர்ந்த மாணவன் ஒருவர் வெற்றிக்கு வறுமை தடை அல்ல என்பது போல் திறமையை நிரூபித்து காட்டி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த மாணவன் எதிர்வரும் 12 ஆம் திகதி பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இந்த மாணவன் தமிழர் தாயக பகுதியில் இருந்து சர்வதேசத்தில் இடம்பெறும் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்து பெருமை தேடிதருவார் என அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.


















