பம்பைமடு காடான தமிழரின் பூர்வீக நிலத்தில் காடை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றிய ரிசாடிற்கு அந்த இடத்தில் குப்பை மேடு உள்ளது தெரிந்தும் அங்கு உங்கள் மக்களை குடியேற்றினீர்கள்? என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இப்பொழுது குப்பை மேட்டை அகற்ற கூறுவதுடன் நீங்கள் எங்கள் பிரதேச சபை தவிசாளரின் செயலை மடத்தனம் என பாராளுமன்றில் விழித்தது சரியா..? எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
பெரும்பாண்மை தமிழரின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற நீங்கள் இன்றுவரை தமிழ் மக்கள் சார்பாக எதையும் செய்யவில்லை என்றும், ஆனால் உங்கள் சமூகத்திற்காகவும் குறிப்பாக உங்கள் சமூகம் சார்ந்த அரச அதிபருக்காகவும் அவருடைய இடமாற்றத்திற்காகவும் குரல் எழுப்புவது நியாயமா எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நீங்கள் கடந்த காலத்தில் வடக்கில் சுகாதார ஊழியர்களின் வேலை தொடர்பாகவோ…தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாகவோ, நீராவியடி பிள்ளையார் கோவில் தொடர்பாகவோ, வெடுக்குநாரி மலை தொடர்பாகவோ..,பெளத்த விகாரைகள் தொடர்பாகவோ.., முல்லை மீன் பிடி பிரச்சினை தொடர்பாகவோ, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவோ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவோ , இன்னும் பல உள்ளது இவை தொடர்பாக என்ன குரல் கொடுத்துள்ளீர்கள்?
ஆனால் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மாத்திரம் தமிழர்களின் வாக்குகள் தேவை போலும் என குறிப்பிட்ட ஆர்வலர்கள் இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ் கிராமங்களுக்குள் வரபோகிறீர்கள்?
என்றும் , உங்களுக்கு வால் பிடிக்கும் தமிழர்கள் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் தரப்போகிறார்கள்?
இனிமேலும் உங்களுக்காக வாக்கு கேட்டு அவர்கள் வந்தால் மானமுள்ள தமிழ் இளைஞர்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர்கள் கூரியுள்ளனர்.
இதேவேளை குறிப்பாக எமது தேசியம் பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே சபையில் ரிசாட் அவர்கள் உரையாற்றுகையில் நித்திரையில் இருந்தீர்களா..?
இல்லை ரிசாட் நாடாளுமன்றில் உரையாற்ற போகிறார் என்றதும் ஏன் எனக்கு வம்பு என்று பாராளுமன்றம் போகாமலேயே இருந்து விட்டீர்களா..? எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வன்னியை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான உங்களுக்கு பம்பைமடு காடு பற்றிய வரலாறு தெரியாதா ..?
அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அமர்ந்து விட்டீர்களா? ஒருவரேனும் ரிசாட் அவர்கள் உரையாற்றுகையில் குறிக்கிட்டு கதைக்காமல் இருந்துள்ளீர்களே?
ஆனால் மேடைகளில் மாத்திரம் வாய் கிழிய கத்தி வாக்கு வங்கி சேகரிக்க மாத்திரம் தான் உங்களுக்கு தெரியும் போல!
எனவே இனியும் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க ஆரம்பிக்காதீர்கள் என குறிப்பிட்ட அவதானிகள் ஒவ்வொரு இளைஞனும் முன் வந்தால் வன்னியை மாற்றி அமைக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.
வன்னியில் ரிஷாடை எதிர்க்கும் மானத் தமிழன் சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ மட்டுமே மற்ற எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மானங்கெட்ட தமிழ் தலமைகள் இதற்கு என்ன பதில்.
240 கோடி பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதி முடித்து களவாடியது ஆதம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.