நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் அரச அதிபர் இட மாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிபராக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க அதிபராகுவதற்குரிய தகுதியுடைய திருமதி கலாமதி பத்மஜாவை நியமிக்க வேண்டாம் ஒற்றைக் காலில் நிற்கிறார் வியாழேந்திரன்.
ஒவ்வொரு அமைச்சு அலுவலகமாக சென்று கலாமதி நியமித்தால் தான் மாவட்ட அபிவிருத்திக்குழுவிலிருந்து விலகுவேன், வரும் தேர்தலில் மொட்டுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என பிரதமர் மகிந்தவிடம் மன்றாடி இறுதியில் அந்த நியமனதினை தடுத்துள்ளாதாகத் தெரியவருகின்றது.
இதனால் எப்படியான முடிவு எடுப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக பிரதமரின் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தெரியவருவதாவது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பின்பு ஊழல் குற்றச் சாட்ட அடிப்படையில் மாகாண சபை பதவி ஒன்றில் அமர வைக்கப் பட்ட கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டாம் என்பதே வியாழேந்திரனின் கோரிக்கை.
முஸ்லீம் ஒருவரை நியமித்தாலும் பறவாயில்லை என்று வியாழேந்திரன் மஹிந்த மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ் வாரம் வழங்கப்பட இருந்த நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாகம் சுமுகமாகவும் ஊழலற்ற சூழலில் மக்களின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் போது அரசாங்க அதிபரை மாற்றுவதற்கு சிறு பிள்ளை விளையாட்டு.
அந்த அடிப்படையில் கலாமதி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு அமைச்சில் நியமன கடிதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இவ் வாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும் இரண்டு நாட்களாக இந்த நியமனத்தை நிறுத்தி வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என வியாழேந்திரன் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலைமையில் இந்த நியமனம் இன்று தேவையானதா என மக்கள் பெரும் வினா எழுப்புகின்றனர்.
அது மட்டுமல்லாது திருமதி கலாமதி பத்மஜா கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலராக இருந்த போது சுனாமி வீட்டுத் திட்டத்தில் அவருடைய கணவர் பிள்ளையானின் வலது கரமாக செயற்பட்டவருமான பஞ்சலிங்கம் என்பவரும் இணைந்து கோடிக் கணக்கில் மக்களின் வீட்டுத் திட்ட பணத்தை அபகரித்து ஊழலில் ஈடுபட்ட குற்றச் சாட்டு இன்று வரை உள்ளதாகவும் வியாழேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிலும் தான் மாவட்ட அபிவிருத்திக்கு குழுத் தலைவராக இருக்கின்ற போது தனக்கு ஆதரவாக செயல்பட மாட்டார் என்று கூறியும் அதை போன்று 2 மில்லியன் ஒப்பந்த வேலைத்திட்டத்தில் இவர் இணைந்து செயல்பட மாட்டார் என்கிற அடிப்படையிலும் இவரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது .
அந்த அடிப்படையிலேயே குறித்த நியமனமானது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஊழலற்ற சிறந்த வகையில் நிருவாகம் செய்யும் தற்போதைய மாவட்ட அரசாங்க அதிபரை நீக்கி விட்டு ஊழல் மற்றும் மோசடிகளிற்கு ஒத்துளைக்கும் அரச அதிபரை நியமிப்பதில் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.