தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவரை தொடர்ந்து தமது பாலியல் இச்சையை பயன்படுத்தும் ஒரு கொடுரன் பற்றி முகநூல்வாசி ஒருவர் வேதனையுடன் பதிவிட்ட பதிவு இது.
இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமியை தொடர்ச்சியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தான் விரும்பும் நேரமெல்லாம் தமது வீட்டில் பணிப்பெண்ணாக வைத்துள்ள சிறுமியை தமது காம இச்சையை தீர்க்க பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
வறுமையான ,நோய் வாய்ப்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய பெண் சிறுமிகளை வேலைக்கு அனுப்பி அதில் கிடைக்கும் சிறுபணத்தை வைத்து வாழ்க்கையை நடந்துகின்றார்கள்.
ஆனால் அச்சிறுமி வீட்டு எஜமானர்களால் சீரழிக்கபடுவது எத்தனி பேருக்கு தெரியும்? எதுவும் தெரியாத அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை இப்படியான கொடூரன்களால் சீரழிக்கப்பட்டு விடுகின்றன.
சிறுமியின் நலன் கருதி சில அநாகரிகமற்ற புகைப்படங்களை பதிவு செய்ய விரும்பவில்லை
இதே போன்று இன்னும் சிறுமிகள் இனியும் பாலியல் பலாத்காரம் செய்யப்படாமல் இருக்க பெற்றோர்களே சிறுமிகளை வீட்டுவேலைக்கு அனுப்பும் போது கவனமாயிருங்கள்.
இதேவேளை இலங்கையில் இவ்வளவுக்கு கேடுகெட்ட மனிதமிருகங்கள் இருப்பது வேதனையாகவுள்ளது என்பதுடன் , இவர்களை போன்றவர்கள் நாட்டு எத்தனை அபாயகரமானது என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , இலங்கை புலனாய்வு படையினர் மற்றும் இலங்கை அரசு இந்த குற்றவாளியை இனம் கண்டு சரியான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.