தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சங்கரெட்டி காவல் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் தன்னை பல ரவுடிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் புகாரை நம்பி விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நேற்று காலை 9.30 மணி அளவில் அந்த சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு காதலனுடன் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டுள்ளார். காதலுடன் ஊர் சுற்றியதை மறைக்க, வீட்டில் இப்படி பொய்யை கூறி உள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.