புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தற்போது கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிறப்பு பரிசோதனைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருவரும் மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கக்கு வந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் 47 வயதான இந்தோனேசிய பெண். மற்றையவர் 37 வயதானவர்.
இதற்கிடையில், நேற்று முதற்கட்ட மாதிரி பரிசோதனையில் ஐடிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. நோயாளிகளின் இரண்டாம் நிலை மாதிரிகள் குறித்து ஆய்வக சோதனைகள் இன்னும் நடத்தப்பட்டு வருவதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று இறுதி அறிக்கை எடுக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.