சீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளதுடன், 1300 பேர் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
ஹூபாய் மாகாணத்தில் மாத்திரம் மேலும் 24 பேர் உயிரிந்துள்ளதுடன், ஏனைய பிரதேசங்களில் குறைந்தது 4 பேர் உயிரிந்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளுமாறு சீனாவின் குடிவரவு அதிகாரிகள் அந்த நாட்டு மக்களிடம் கோரியுள்ளனர்.
இதேவேளை சீனாவின் அனைத்து இடங்களிலும் கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை பருவ காலத்தில் திறப்பது பிற்போடப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும், வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் நிலைமைகளை பார்வையிடுவதற்காக பீஜிங்கிக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவும் தமது பிரஜைகள் சீனா செல்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
சீன மற்றும் ஹொங்கொங் பங்குச்சந்தைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. பங்குகளின் பரிமாற்றங்களும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
\https://youtu.be/RbCHWIa2Hao