குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்தே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர்.
இதற்காக ரணிலின் வீட்டிற்கு சென்ற விசாரணைக்குழு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை ரணில் அறிந்திருந்தாரா என்பது பற்றி அவரிடம் தீர விசாரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, கடந்த ஆட்சியில் பிரதமராக தாம் பதவி வகித்தாலும் முக்கியமான பாதுகாப்பு கூட்டங்களில் தாம் பங்குகொள்ளவில்லையெனவும், மைத்ரிபால சிறிசேனவே அவற்றை நேரடியாக கையாண்டதாவும் ரணில் அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.