வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையற்றும் பெண் பிரதி அதிபரிடம் அநாகரிகமான முறையில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த பிரதி அதிபரின் கைப்-பை (Hand Bag) மற்றும் ஏனைய அவரது தனிப்பட்ட உடமைகளை, பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அதிபர் சோதனை செய்துள்ளார்.
எனினும் பிரதி அதிபரின் பைகளில் அவர் தேடிய எதுவும் இல்லை என்ற போதும் தனது செயலை நியாயப்படுத்தும் நோக்குடன் அதிபர் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அதிபரின் இந்த செயல் பாடசாலை ஆசிரியர்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரதி அதிபரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை அதிபர் எதற்காக பிரதி அதிபரின் கைப்பையை சோதனையிட்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதனையடுத்து அதிபரின் செயல் தொடர்பில் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளரிடமும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் முறையிடப்போவதாக பாதிக்கபட்ட பெண் பிரதி அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பிரதி அதிபரின் சுயகௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்குத் தொடர்பில் வலயக்கல்விப் பணிமனை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.