அமெரிக்காவில் குறைவான அளவில் மேலாடை அணிந்ததாக கூறி விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பெண் தான் அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
Denver நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு கிளம்பும் விமானத்தில் பயணிக்க விமான நிலையத்துக்கு ஆண்டிரியா வேல்ட்வைட் என்ற பெண் வந்தார்.
அப்போது விமான நிலைய ஆண் ஊழியர் ஒருவர் ஆண்ட்ரியாவை விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது என கூறினார்.
இதற்கு காரணம் அவர் அணிந்திருந்த மேலாடை குட்டையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் ஆண்ட்ரியா இது குறித்து விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் ஒருவழியாக விமானத்தில் ஏற அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வேதனை தெரிவித்து ஆண்ட்ரியா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், விமான நிறுவனத்தின் ஊழியர்களால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளானேன்.
நான் கெளரவமான பணியில் இருக்கிறேன், இது போன்ற மோசமான நடவடிக்கைகளை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
குறித்த நிறுவனத்தின் விமானத்தில் தான் அடிக்கடி பயணிப்பேன், என் காதலரை பார்க்க செல்லவே அதில் பயணம் செய்வேன்.
இதே போன்ற உடையை பல முறை அணிந்து சென்ற போது இவர்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லையா?
விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்ட பின்னர் $100 பயண சலுகை கூப்பன் கொடுத்தார்கள், ஆனால் அதை நான் வாங்க மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்ட்ரியாவுடன் இது சம்மந்தமாக தனிப்பட்ட முறையில் பேசி வருகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு வசதியான பயண அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.