பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்தது எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தீவிர எச்சரிக்கையுடன்” இருக்குமாறு பிரித்தானியா கடற்படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதன்கிழமை இரவு ஷார்ஜாவின் வடமேற்கே உள்ள எமிராட்டி ஷெய்கோம் நகருக்கு அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறியது. இதை தவிர மேலதிக தகவல் எதையும் வழங்கவில்லை.
ஷார்ஜா கடற்கரையில் இருந்து 34 கி.மீ தொலைவில் கப்பல் தீப்பிடித்ததை எமிராட்டி அதிகாரிகள் தெரிவித்தனர். தீப்பிடித்த கப்பல், எண்ணெய் டேங்கர் சோயா 1 என தகவல் தெரிவித்துள்ளனர்.
#UEA On signale qu'un tanker serait en feu dans le détroit d'Hormuz, au large des côtes de Sharjahpic.twitter.com/IR7HtAdOLy
— Rebecca Rambar (@RebeccaRambar) January 29, 2020
ஊதியம் பெறாமல் கப்பலில் 16 இந்திய மற்றும் பாகிஸ்தான் குழுவினர் ஒரு வருடமாக சிக்கி தவிப்பதாகவும், பிரச்சனை தொடர்பான சட்ட நடவடிக்கைக்கு மத்தியில் அவர்கள் கரை திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது.
டேங்கரில் தீயணைக்கப்பட்டு அதன் குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் எண்ணெய் கொண்டு செல்லவில்லை என்றும், பராமரிப்பின் போது தற்செயலாக தீ ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.