ஐக்கிய தேசிய முன்னணியின் ( கூட்டணியின்) தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் செயற்பட சஜித் பிரேமதாசாவுக்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சஜித் ஆதரவு உறுப்பினர்கள் 35 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.