கொரோனா வைரஸ் கண்களில் தொற்றக்கூடிய ஆபத்துக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரின் கண் ஊடாக உடலுக்குள் செல்லும் ஆபத்து ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வைரஸில் இருந்து தப்பிப்பதற்காக முக கவசம் பயன்படுத்துவதில் பயனற்ற நிலைமை ஏற்பட்டு வருவாாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தாங்கள் தங்கள் ஆரோக்கியம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு தற்போது இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.