இந்திய சினிமாவின் முக்கியமான நடிகை தாப்ஸீ. இவருடைய நேர்மை மற்றும் தைரியமான பேச்சாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் இறுதியாக அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த ‘கேம் ஓவர்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஸ்பை திரில்லரான ஜன கன மன படத்தில் நடித்துவருகிறார்.
தற்போது அவர் நடித்து முடித்த ‘தப்பட்’ என்னும் ஹிந்தி திரைப்படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கணவன் மனைவிகளுக்கு இடையே வரும் விவாதம் எவ்வாறு விவாகரத்தாக மாறுகிறது என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் தாப்ஸீ விவாகரத்து கொடுக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஆயுஷ்மன் குரானா நடித்த ‘ஆர்டிக்கில் 15’ படத்தை இயக்கிய அபினவ் சின்ஹா இயக்கியுள்ளார். தற்போது இந்தியாவில் அதிகம் தொடுக்கப்படும் வழக்கான விவாகரத்து என்னும் கருவை மையமாக உருவான இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று திரைக்குவரவுள்ளது. இதுமட்டுமின்றி தாப்ஸீ “சபாஷ் மித்து” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.