இந்தியாவில் நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், திடீரென்று நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியதால், இந்த வழக்கில் தொடர்பு டைய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனால் இவர்களுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது திடீர் திருப்பமாக
நான்கு பேரில் ஒருவரான பவன் குப்தா தனது தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் குற்றம் நடக்கும் போது தனக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதால், தன்னை சிறார் குற்றவாளியாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டதால், பவன்குபதா தூக்கு தண்டனையில் இருந்து தப்பலாம் என்று கூறப்பட்டது.
இருப்பினும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வராத்தால், இவர் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாம், என்று கருதப்பட்ட நிலையில், டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் நான்கு பேரின் தூக்கு தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
மறு உத்தரவு வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளது. எதற்காக இந்த திடீர் உத்தரவு? என்ன நடந்தது? என்பது குறித்து எந்த ஒரு காரணமும் வெளியாகவில்லை.