இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியான மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இந்த உயிர்கொல்லி வைரஸால் கேரளாவை சேர்ந்த மாணவி முதல் ஆளாக பாதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் மாணவர் தான் பாதிக்கப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், மாணவி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த மாணவி கேரளாவின் திருச்சூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளதோடு தேறி வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.
மேலும் சீனாவின் Wuhanல் இருந்து கேரளா திரும்பிய நிலையிலேயே அம்மாணவிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இந்த கேரளா மாணவி தான் என்றும் அமைச்சர் சைலஜா உறுதி செய்துள்ளார்.