தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் தர்ஷனுக்கும் நடிகை சனம் ஷெட்டிக்கும் காதல் என கூறப்படுவந்த நிலையில், கடந்தாண்டு தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
இது குறித்து சனம் கூறுகையில், எனக்கும் தர்ஷனுக்கும் கடந்தாண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் , ஜூன் மாதமே திருமணம் நடக்கவிருந்த நிலையில் அப்போது அவர் பிக்பாஸில் கலந்து கொண்டதால் திருமணம் நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தர்ஷன் நிச்சயம் ஆனது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் , அதனால் என் புகழ் பாதிக்கும் என கூறியதால் நான் அப்போது யாரிடமும் சொல்லவில்லை என சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார் .
அத்துடன் தர்ஷனுக்காக விளம்பரத்தில் நடிக்க, மற்றும் பிற விடயங்களுக்காக 15 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் தர்க்ஷன் பிக்பாஸ் இன் பின்னர் தன்மீது அபாண்டமான குற்றங்களை சுமத்தி திருமணம் செய்ய்துகொள்ள முடியாது என கூறி தன்னை ஏமற்றிவிட்டதாக சனம் ஷெட்டி தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.