சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
அந்நாட்டின் வுஹான் நகரத்திலிருந்துதான் இந்த வைரஸ் தொற்று ற்று ஏற்பட்டுள்ளது.
அந்த நகரத்தில் 11 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். இதனால் அந்த நகரத்திலிருந்து பிற இடங்களுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸால் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும், இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் எல்லை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால், விடுமுறையில் இருக்கும் சீனர்கள், முறையான அறிவிப்பு வரும்வரை தங்களது நாடுகளுக்கு மீள திரும்ப வேண்டாம் என இலங்கை உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
அத்துடன், கொரோனா வைரஸ் (2019-nCoV ) அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பரவிவருவதுடன் உலக நாடுகளில் அவசர நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தொடங்குகிறது.
அறிகுறிகள் பின்னர் விரைவாக தீவிரமடையக்கூடும், இதன் விளைவாக கடுமையான சுவாச நோய்க்கான நோய்க்குறிகள் உருவாகுகின்றது. இந்த நிலை ARDS என குறிப்பிடப்படும்.
இந்த நிலைமை தொடரும் போத நோயாளியின் நிலை ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது. கொரோனா வைரஸ் சுவாசப் பாதையை தாக்குவதால் எளிதில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இதன் அடுத்தகட்டமாக கடுமையான உடல் வலி ஏற்பட்டு நிமோனியா வந்து கிட்னி செயலிழக்கிறது. இறுதியில் மரணம் ஏற்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கடும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வைரஸ் பரவல் தொடர்பில் தற்போது சில போலியான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சமூக ஊடகங்களில் இது குறித்து போலியான தகவல்கள் பரிமாறப்படுகின்றது. இது கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், உத்தியோகபூர்வ அரச அறிவிப்பு, மற்றும் அரச ஊடங்களில் வெளியாகும் தகவல்களை கவனத்திற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், இதனால் தமிழர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அந்த தகவல் முற்றிலும் போலியானது என பின்னர் செய்திகள் வெளியாகியிருந்து. இவ்வாறான நிலையிலேயே, போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.