இந்தோனேசியாவின் தொலைதூர கிராமமான கெடுங்காங்கில், ஒரு குடும்பம் ஒரு தனித்துவமான மற்றும் அரிதான உடல்நல பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது மருத்துவ நிபுணர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் உள்ளூர் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அப்படி என்ன ஆச்சரியம் என்று கேட்கின்றீர்களா? இந்தோனேசியாவில் உள்ள முராங் குடும்பத்தின் கதையை நீங்கள் அறிந்தால், நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள்.

மாறும் முகம்
முராங் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள் பகலில் ஒரு சாதாரண மனிதனின் முகம் போலவும் இரவில் பல்லியின் முகத்தை போலவும் மாறிவிடுகின்றதாம்.
இந்தோனேசியாவில் கெடுங்காங்கில் என்ற கிராமத்தில் வசிக்கும் சூர்யா முராங் என்ற மனிதர் தனது 12 வயது வரையில் சாதாரணமாகவே இருந்துள்ளார்.
ஆனால் அவருக்கு 12 வயது ஆன பின்னர் அவரின் உடலில் சில விசித்திர மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
அதாவது காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளிக்கும் சூர்யா முராங், இரவில் கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, பல்லியின் முகத்திற்கு மாறிவிடுகின்றார்.

இந்த நிலை அவருக்கு மாத்திரமன்றி அவரது சகோதரிகளுக்கும் ஏற்பட்டுள்ளமை கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
இவர்களின் குடும்பத்தைப் பாதிக்கும் நிலை ட்ரீச்சர் காலின்ஸ் நோய்க்குறி என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது முக குறைபாடுகள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளில் வெளிப்படும் ஒரு அரிய மரபணு கோளாறு என குறிப்பிடப்படுகின்றது.



















