• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கோட்டாவின் ஆட்சியில் நல்லிணக்கத்துக்கு ஆப்பு! மாவை சேனாதிராஜா

Editor by Editor
February 1, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கோட்டாவின் ஆட்சியில் நல்லிணக்கத்துக்கு ஆப்பு! மாவை சேனாதிராஜா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர தின விழாவிலும் அரச நிகழ்ச்சிகளிலும் மற்றும் பாடசாலைகள், பொது நிகழ்ச்சிகளிலும்கூட தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவும் இசைக்கவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அரசமைப்பு விதிமுறையின்படியே இந்த நிகழ்ச்சிகளில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின் இந்த நல்லிணக்க நடவடிக்கை மீறப்பட்டுள்ளது.”

இவ்வாறுஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவித்தலைக் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1949இல் சுதந்திர தினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழில் அப்போது நல்லதம்பி என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 1956இல் சிங்களம் மட்டும் சட்டம் வந்த பின்னும் 1987ஆம் ஆண்டு வரை இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு படியாக சிங்களத்தில் இசைத்து வந்த தேசிய கீதம் தமிழிலும் பாடி இசைப்பதற்கு நடைமுறை வந்தது.

இந்தநிலையில், 2019ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்மைப்பலம் இருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து விலகினார். அதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்.

அவர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பொது நிர்வாக அமைச்சும் அரசும் “எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடவும் இசைக்கவும் வேண்டும்” என்று அறிவித்திருக்கின்றது.

ஆனால், பல நாடுகளில் அந்த நாட்டுத் தேசிய கீதம் பல மொழிகளிலும் பாடப்படுகின்றமையைக் குறிப்பிடலாம்.

2015இன் பின் சுதந்திர தின விழாவிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் பாடசாலைகள், பொது நிகழ்ச்சிகளிலும் கூட தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவும் இசைக்கவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அரசமைப்பு விதிமுறையின்படியே இந்த நிகழ்ச்சிகளில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லிணக்க நடவடிக்கை தற்போது மீறப்பட்டுள்ளது.

1956ம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம் திகதி அப்போது பிரதமராயிருந்த பண்டாரநாயக்கவினால் “நாட்டின் அரச கரும மொழி சிங்களம் மட்டும்” என்று நாடாளுமன்றத்தில் பிரேரனை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதனை எதிர்த்தும், தமிழுக்கும் சம உரிமையை வழங்குமாறு வலியுறுத்தியும் தந்தை செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் நாடாளுமன்றத்தின் (பழைய நாடாளுமன்றம்) முன் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது.

ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உயர் தகை சான்றோரும்அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்தச் சத்தியாக்கிரகிகள் மீது சிங்களத் தீவிரவாதிகள் கருங்கற்களை வீசியும், மூங்கில் தடிகளால் தாக்குதல் நடத்தியும் கலவரத்தை உண்டாக்கினர்.

அந்த வன்முறைத் தாக்குதலினால் சத்தியாக்கிரகிகள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், நாகநாதன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அமிர்தலிங்கத்தின் தலை பிளந்தது. காலிமுகத்திடல் இரத்தம் சிந்திய களமாகியிருந்தது. அமிர்தலிங்கம் தலைக்குக் கட்டுப்போட்டும் இரத்தம் சிந்தியபடி நாடாளுமன்றத்துக்குள் சென்றார் அங்கு உரையாற்றினார்.

தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து உரையாற்றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை எதிர்த்தும் வாக்களித்தனர்.

சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா நாடாளுமன்றத்தில் பேசும்போது, “ஒரு மொழி (சிங்களம்) என்றால் இரண்டு நாடு இரண்டு மொழிகள் (சிங்களமும் தமிழும்) என்றால் ஒரு நாடு” என்று கூறினார்.

இன்றுவரை இந்த நிலைமை மாறவில்லை. இரத்தக்களரி மட்டுமல்ல இலட்சக்கணக்கான உயிர்களும் பலியிடப்பட்டுவிட்டன.

தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்திலும் 1949 முதல் நடைபெற்ற மாநாடுகளிலும் “இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழருக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை.

ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்கப் போராட வேண்டும்” என்று கூறினார். பல போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன.

1956இன் பின் இலங்கையில் தமிழ் மக்களின் மொழிப் போராட்டங்களின்போது இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரலாய் (முதல் ஜனாதிபதி) விளங்கிய இராஜ கோபாலாச்சாரியார் தனது ‘சுவராஜ்’ பத்திரிகையில் பிவருமாறு குறிப்பிட்டார்,

“இலங்கையில் இரண்டு இணங்களுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளி அறிகுறியே மொழிப்பிரச்சினை. இது மொழிகளுக்கிடையிலோ, பண்பாடுகளுக்கிடையிலோ நடைபெறும் போராட்டமல்ல.

இரண்டு சமூகங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாகும். தமிழ்பேசும் மக்கள் சமத்துவமாக நடத்தப்படப் போகின்றார்களா? இல்லையா? என்பதே கேள்வி” – என்று எழுதினார்.

உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின் மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன. அந்த நாடுகளின் மக்களின் மொழிகளில், இயற்கை அமைவுகளின், பிரதேசங்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பற்றி சுதந்திரத்தின் தாகம் பற்றிக் குறிப்பிடுகின்ற தேசிய கீதங்களைப் பார்க்கின்றோம்.

அண்மையில் அமைச்சர் ஒருவர் இந்தியாவில் ஒரு மொழியிலேதான் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இலங்கையில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு என்று அறிவற்றுப் பேசினார்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்று உருவாக்கிய அரசமைப்பு இன்று பூரணமான ஒரு கூட்டாட்சி. அதாவது ‘Federal Constitution’ என்ற கூட்டாட்சி அரசமைப்பைக் கொண்டுள்ள நாடே இந்தியா.

பல பிராந்திய, பல மொழிகளில் மொழி மாநிலங்கள், பூரண அதிகார ஆட்சி முறைகளைக் கொண்டுள்ளன. மாநிலங்களுக்குள்ளும் சமூகங்கள் பிரதேசங்கள் மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் இடமுண்டு. அவ்வாறு பகிரப்பட்டும் உள்ளன.

அற்புதமான இந்திய தேசிய கீதம் இதயங்களை எழுச்சி கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் தேசிய கீத இந்தி மொழியில் இல்லை. இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியிலே உருவாக்கிய தேசிய கீதம் வங்க மொழியில்தான் பாடப்படுகின்றது.

இந்திய நாட்டின் இனங்கள், மொழிகள், மொழி பிராந்தியங்கள், மாநில அரசுகளின் பெயர்கள், நதிகளின் மலைகளின் பெயர்கள் தேசிய கீதத்திலே குறிப்பிடப்படுகின்றன.

இவையெல்லாம் இலங்கை நாட்டின் பௌத்த, சிங்கள பெரும்பான்மைத்துவ அடிப்படைவாதிகளுக்குப் புலப்படாது” – என்றுள்ளது.

Previous Post

தாய் தேசத்திற்காக மாணவர்கள் கல்வி கற்ற வேண்டும்! சிறீதரன்

Next Post

யாழ்ப்பாணத்திலிருந்து காரில் கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் கைது

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
இலங்கைச் செய்திகள்

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
இலங்கைச் செய்திகள்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
Next Post
யாழ்ப்பாணத்திலிருந்து காரில் கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து காரில் கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் கைது

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் ராசியினர் அவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கா?

January 1, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

January 1, 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

January 1, 2026

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy