ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் இணை தலைவர்களாக மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை நியமிக்க வேண்டும் என தனித்து தீர்மானித்துள்ளதாக ராஜாங்க ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
இரண்டு தலைவர்கள் ஒன்றாக இணைந்து முன்னெடுத்துச் செல்லும் நிர்வாகத்தை நாட்டு மக்கள் மீண்டும் நம்ப மாட்டார்கள்.
நாங்கள் பேச்சுவர்த்தை நடத்த பல விடயங்கள் உள்ளன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு தலைவர்கள் இருந்தனர்.
இரண்டு தலைவர்களின் கீழ் கட்சியையோ நாட்டை நிர்வகிக்க முடியாது. எங்களது தலைவர் மகிந்த ராஜபக்ச.
நாங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்து எமது அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.