கொரோனா வைரஸ் பற்றிய தகவல் பரவும் நிலையில், பாடசாலைக்கு அருகில் சீனர்கள் தங்கியிருக்கின்றனர் என்ற காரணத்தால் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டம், தென்மராட்சிக் கல்வி வலயத்தில் ஒரு பாடசாலையில் கற்கும் பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் கட்டடத்தில் தென்மராட்சியில் தண்ணீர்க் குழாய் பொருத்தும் பணியில் சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருப்பது, அந்தப் பாடசாலைக்கு அருகில் உள்ள தனியார் கட்டடத்திலேயே. இதுவரை காலமும் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்கவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் பலரது உயிர்களைப் பறித்து பீதி ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனர்கள் அந்தப் பாடசாலைக்கு அருகில் வசிக்கின்றமையால் இந்த நிலைமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.