600 பொலிசாரை கொன்றதன் மூலம் விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் இழைத்துள்ளார்கள் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறையிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் விமல என்பவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.
புலிகள் இனப்படுகொலை செய்தார்கள் என எந்த அரசும் முறையிடாமல் இருக்கும் நிலையில், தானே இந்த முறைப்பாட்டை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சாட்சியமளிக்க அழைக்கப்பட்டால் நேரில் வந்து சாட்சியமளிக்க கருணா தாயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
600 பொலிசாரை சுட்டுக் கொன்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.