கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சீனாவில் இருக்கும் இலங்கை மக்களை மீண்டும் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்த ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவத்திற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டூவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவில் வுஹான் மாகாணத்திலிருந்து எங்கள் குடிமக்களை மீண்டும் கொண்டுவர முன்வந்த ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவத்தின் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் இந்த நாளிலும், காலத்திலும் மிகவும் அரிதானது, நீங்கள் காட்டிய தன்னலமற்ற தன்மைக்கு தேசம் மிகவும் நன்றியுள்ளதாக இருக்கும் என அவர் டூவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Heartfelt thanks to the men & women of #srilankanairlines who volunteered to bring our citizens back from #wuhan province in China. The dedication & sacrifice you have shown is very rare in this day & age & the nation is extremely grateful for the selflessness you have shown.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) February 1, 2020