தமிழகத்தில் மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்த நபரை கொலை செய்த கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் அருகே இருந்த தோட்டத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மில்டன்ராஜ் என்பது தெரியவந்தது.
கட்டிட தொழிலாளியான அவர் கடந்த 25 ஆம் திகதி அங்குள்ள தேவாலயத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் மில்டன்ராஜ் செல்போனை பொலிசார் ஆய்வுசெய்ததில் அவர் அதேபகுதியை சேர்ந்த கொத்தனார் விஜயனுக்கு போன் செய்து பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து விஜயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மில்டன்ராஜை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், மில்டன்ராஜ் என்னுடைய மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டினார்.
அதனால் அவரை என் நண்பர்களின் உதவியுடன் கொன்றேன். அவர் செல்போனில் இருந்து வீடியோ மற்றும் போட்டோக்களை அழித்து விட்டேன் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.