கிளிநொச்சியில் விவேகானந்த நகரில் புலிச் சின்னத்துடன் ஆவணங்கள், துண்டு பிரசுரங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ தேசிய அடையாள அட்டை, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு, இராணுவ புலானாய்வுத்துறை ஆகியோரின் போலி இறப்பர் முத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) பிற்பகல் கிளிநொச்சி விவேகானந்த நகரில் உள்ள வீடு ஒன்று சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டபோதே மேற்படி பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.