இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன பெண் தற்போது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுயிரை காப்பாற்ற முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தன்னை குணப்படுத்திய வைத்திய குழுவினருக்கு சீனப் பெண் நன்றி தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.
“வைத்திய ஊழியர்களுக்கும், விசேடமாக தலைமை தாதிக்கும் சீன பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தன்னை கவனித்துக் கொள்ள எவரும் அருகில் வரவில்லை. எனினும் தன்னை ஆபத்தான கட்டத்திலிருந்து காப்பாற்ற பின்னர் அனைவரும் முன் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுயிரை காப்பாற்றுவதற்காக இலங்கை சுற்றுலா அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கைக்கும் குறித்த பெண் நன்றியை தெரிவித்திருத்துள்ளார்.
43 வயதான குறித்த சீனப் பெண் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக நேற்றைய தினம் தலைமை வைத்திய அதிகாரி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.