கடந்த அரசாங்க காலத்தில் மத்திய கலாசார நிதியத்திற்கு ஏற்பட்ட பாரிய பாதிப்பை களைந்து அந்த நிதியத்தை சக்திமிக்கதாய் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட பிரதமர் சிகல்பொத்த ராஜமகா விகாரைக்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் கலந்துக்கொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.