முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என கோர விரும்பவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடப்படும் கடந்த நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம், மாற்றி விடக்கூடாது என நான் விரும்புகிறேன்.
தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான பாடல் அல்ல. அது தமிழ் பேசும் இலங்கையர்களின் “இலங்கையர் அடையாளம்”.
My final hour call to HE president @GotabayaR as the former minister for #National #Integration & Official #Languages. #NationalAnthem in Tamil language is not just another song but The "#Srilankan #Identity" of the Tamil speaking community, which is the need of the Hour! #lka pic.twitter.com/7v1I1sk2Fv
— Mano Ganesan (@ManoGanesan) February 2, 2020
இதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தின் மூலம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த டுவிட்டர் செய்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டுவிட்டர் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.