கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.
வத்தேகம, அட்டலஹகொட பகுதியில் கடந்த 4 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.