நடிகர் மன்சூர் அலிகான் புது படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் 120 கிலோ எடையிலிருந்து 90 கிலோ எடைக்கு மன்சூர் அலிகான் உடல் எடையை குறைத்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர் உடல் எடையை குறைக்க இன்னும் பல முயற்சி செய்து வருகிறார்.
அதோடு இவர் நடிக்கும் படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, வில்லன், காமெடியன் கதாபாத்திரத்தில் அசத்திய மன்சூர் அலிகான் தற்போது ஹீரோ கதாபாத்திரத்தில் எப்படி இருப்பார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.