சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் அந்நாட்டு பெண்ணை இந்தியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சீனாவை சேர்ந்தவர் ஜி ஜோ டோரா. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் மண்ட்சவுர் நகரை சேர்ந்தவர் சத்யராத்.
இருவரும் கனடாவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஒரே கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
ஐந்து வருடமாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர், இதையடுத்து டோரா – சத்யராத் காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சை கொடி காட்டினார்கள். இதையடுத்து இருவருக்கும் மண்ட்சவுர் நகரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அங்கிருந்து மணப்பெண் டோராவின் பெற்றோர் மற்றும் மூன்று உறவினர்கள் இந்தியா வந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த திருமணத்தில் டோராவின் உறவினர்கள் மேலும் பலர் கலந்து கொள்ள நினைத்தாலும், சீனாவில் உள்ள சூழ்நிலையால் அவர்களால் இந்தியா வரமுடியவில்லை.
திருமணத்துக்கு பின்னர் மணமகன் சத்யராத் கூறுகையில், எங்களின் ஐந்து வருட காதல் திருமணத்தில் முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
திருமணத்துக்கு பிந்தைய கொண்டாட்டங்களை சீனாவில் நடத்த திட்டமிட்டோம்.
ஆனால் கொரோனா வைரஸ் பயத்தால் அதை ரத்து செய்துவிட்டோம் என கூறியுள்ளார்.


















