இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெனிஸ் நகரில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடி குண்டைவெடிக்கச்செய்வதற்காக 3,500 பேர் வரை வெனிஸ் துறைமுகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
சுமார் 225 கிலோ எடையில் 129 கிலோ டி.என்.டி கொண்ட இந்த குண்டு ஜனவரி மாதம் கழிவுநீர் பாதைகளை சரிசெய்யும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த வெடியை வெடிக்க வைக்கும் நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கையாக 3500 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதுடன் படகு, புகையிரதம் மற்றும் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
அத்துடன் மார்கோ போலோ விமான நிலையத்திற்கு காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பாக குண்டுகளிலிருந்து உருகிகள் அகற்றப்பட்டு செயழிலக்கச்செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலுக்கடியில் குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.