திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலக அலுவலகத்திற்கு முன்னால் இன்று குறித்த காவிய போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், இந்த காவிய போராட்டம் 1071 நாளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
“எம் பிள்ளைகள் எமக்கு வேண்டும்” என்ற கோஷத்தை எழுப்பியவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.