72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தனக்கான இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவே முதல் முறையாகும்.
இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.