எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இணைந்து தேசிய அரசாங்கமாக செயற்படவுள்ளதாக வெளியான தகவலை பொதுஜனபெரமுன முற்றாக மறுத்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த ஐந்து வருடங்களில் தேசிய அரசாங்கம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு கசப்பான அனுபவம் உள்ளது.
தேசிய அரசாங்கம் காரணமாக கடந்த கடந்த காலத்தில் மக்கள் பல்வேறு கோணங்களில் திசை திருப்பப்பட்டனர்.
எனவே கூட்டணி என்பது பொருந்தாது ஒன்றாகவே இருக்கும். இந்த நிலையில் மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை ஜனாதிபதி விடுப்பார்.
இதன் பின்னர் ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.