இலங்கையில் இன ஒற்றுமை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையர்கள் ஒற்றுமை குறித்த விடயத்தை மீண்டும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
சமூகங்களுக்கு இடையில் இருந்த ஒத்திசைவில் சுதந்திரத்துக்கு பின்னர் தேய்வு ஏற்பட்டுள்ளது. படிப்படியாக சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை குழைந்து வந்துள்ளது.
இந்தநிலையில் 2015-19ம் ஆண்டுக்காலப்பகுதியில் தமது அரசாங்கத்தின் கீழ் நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
சிறுபான்மை மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சூழ்நிலையில் 72ஆவது சுதந்திரத்தினம் கொண்டாடப்படுகிறது. இதன்போது ஒற்றுமைக்கு முதன்மை வழங்குவதன் மூலம் இலங்கையர்கள் சமாதானம் மற்றும் சகவாழ்வுடன் வாழமுடியும் என தெரிவித்துள்ளார்.