இலங்கை சோசலிச குடியரசின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்றி வைத்துள்ளதுடன், தமிழ் மற்றும் சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய பூங்காவில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.